சிறிய விபத்தில் சிக்கி, ஓய்வில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா
செப் 10, 2024
Advertisement
"வாரிசு" கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் தனுஷ் ஜோடியாக "குபேரா" படத்திலும், தெலுங்கில் "புஷ்பா" படத்திலும், ஹிந்தியில் "சிக்கந்தர், சாவா" படத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஓரிரு வாரங்களாக அவர் சமூக வலைத்தளங்களின் பக்கம் வரவில்லை. அவர் சிறிய விபத்தில் சிக்கி ஓய்வில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“நான் இந்தப் பக்கம் வந்து சிறிது நாட்களாகிவிட்டது. எனக்கு சிறிய விபத்து ஏற்பட்டு, மருத்துவர்கள் சொன்னபடி வீட்டில் ஓய்வில் இருந்தேன். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். இனி நான் சுறுசுறுப்பாக செயல்படுவேன். உங்களை கவனித்துக் கொள்வதில் எப்போதும் முன்னுரிமை கொடுங்கள். வாழ்க்கை மிகவும் குறுகியது, உடையக் கூடியது. நமக்கு நாளை கிடைக்குமா என்பது தெரியாது. எனவே ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருங்கள்,” என்று தத்துவமாகவும் பதிவிட்டுள்ளார்.
அதோடு, “குறிப்பு" என்று சொல்லி, “நான் இப்போது லட்டுக்களை அதிகமாக சாப்பிடுகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு லட்டு, லட்டுக்களை சாப்பிடுகிறதே…..கமா, ஆச்சரியக்குறி…என "க்ரிஞ்ச்" ஆக யாரும் கமெண்ட் செய்யவில்லை என்பது ஆறுதல்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!