
சுசித்ரா மீது சட்ட நடவடிக்கை : ரீமா கல்லிங்கல் அறிவிப்பு
பாடகி சுசித்ரா அளித்த பேட்டி ஒன்றில், ‛‛நடிகை ரிமா கல்லிங்கல் சினிமா கேரியர் அடிபட்டதற்கு காரணமே அவர் நடத்திய போதை பார்ட்டி தான். அதில் பல இளம் பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு போதைக்கு அடிமையானார்கள். கொச்சியில் ரீமா, அவரின் பாய் பிரண்ட் அபு ஆகியோர் வீட்டில் ரெய்டு நடந்தது. அவரை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை. அவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்தார்கள். புதிது புதிதாக டிரக்ஸை கொண்டு வந்தார்கள். அவரின் பார்ட்டிக்கு போன மலையாள இசையமைப்பாளர்கள் பல பேர் என்னிடம் இதுபற்றி சொல்லியிருக்கிறார்கள்"" என்றார்.
இந்த விஷயம் வலைதளங்களில் விவாதமான நிலையில் சுசித்ரா மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக ரீமா கல்லிங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛என் மீது பாடகி சுசித்ரா எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டி உள்ளார். அதுபோன்ற எந்த நிகழ்ச்சியையும் நாங்கள் நடத்தவில்லை. சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அவர் மீது சிறப்பு விசாரணை குழுவில் புகார் அளித்துள்ளேன். அவர் மீது அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்"" என தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!