
பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைக்காதீர்கள் : பிரபுதேவா
இந்த நிலையில் பிரபுதேவா அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னுடைய பிள்ளைகள் இடத்தில் நான் அதிகமான பாசம் வைத்திருக்கிறேன். ஆனால் அது போன்ற தவறை யாரும் செய்யாதீர்கள். காரணம் பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்தால் அதன் பிறகு அவர்களுக்கு ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டால் கூட அதை நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாது. குறிப்பாக அவர்களை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று எந்நேரமும் அவர்களைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டே இருப்போம். இதனால் நம்முடைய வாழ்க்கையை நம்மால் நிறைவாக வாழ முடியாது. அதனால் தான் பிள்ளைகள் மீது அதிகப்படியான பாசம் வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!