
பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்த் மகன்
இந்த நிலையில் பொன்ராம் அடுத்து இயக்கும் புதிய படத்தில் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். இதில் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார் நடிக்கின்றார். சரத்குமார் மறைந்த நடிகர் விஜயகாந்துடன், "புலன் விசாரணை", "கேப்டன் பிரபாகரன்", "சந்தன காற்று" போன்ற படங்களில் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இதன் கதை விவாத பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. நேற்றுமுன்தினம் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தை பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!