
ஐஸ்வர்ய லட்சுமி வெப் தொடரில் இணைந்த முக்கிய நடிகர்கள்
இவை தவிர்த்து முதல் முறையாக தமிழில் உருவாகும் புதிய வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மோசு என்பவர் இயக்கும் இந்த வெப் தொடருக்கு "தீவினை போற்று" என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 1990 காலகட்டத்தில் நடைபெறும் கதை களத்திற்கான அரங்கம் அமைத்து கடந்த 40 நாட்கள் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இப்போது இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் பாபு ஆண்டனி ஆகியோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரை சோனி லிவ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!