
நாகசைதன்யா - சோபிதா துலிபாலா பிரிவு குறித்து ஜோதிடம் கணித்தவருக்கு சிக்கல்
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக நாகசைதன்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக செய்திகள் அடிபட்டு வந்தன. அது உண்மைதான் என்பது போல சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஜோதிடர் வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா - சோபிதா துலிபாலா இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் சில வருடங்களுக்குள் அவர்களுக்கு பிரிவு ஏற்படும் என்றும், அதுவும் ஒரு பெண்ணால் ஏற்படும் என்றும் தானாகவே ஜோதிடம் கணித்து கூறினார். இவரது இந்த பேச்சு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இவர் மீது தெலுங்கு திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வாயிலாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அது மட்டுமல்ல தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷ்ணு மஞ்சு இவரை அழைத்து கண்டித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ள விஷ்ணு சுவாமி, “நான் வேண்டுமென்றே யார் மனதையும் புண்படுத்தும் விதமாக எதையும் கூறவில்லை. ஜோதிட கணிப்பை தான் கூறினேன். இனிமேல் நான் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து என்னுடைய கணிப்பை பொதுவெளியில் கூறப்போவதில்லை” என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!