
கோப்ரா என் கதை இல்லை... அதிருப்தியுடன் தான் படத்தை இயக்கினேன் - அஜய் ஞானமுத்து
இந்த நிலையில் தற்போது டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கொடுத்த பேட்டியில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் தோல்வியடைந்தது எதனால் என மனம் திறந்து உள்ளார் அஜய் ஞானமுத்து.
இது பற்றி அவர் கூறும்போது, "கோப்ரா படத்திற்காக அதன் தயாரிப்பாளரிடம் என்னிடம் இருந்த கதையை கூறினேன். ஆனால் அது தயாரிப்பாளரை கவரவில்லை. வேறு ஒரு கதாசிரியரிடம் இருந்து அவரது கதையை வாங்கி மெருகேற்றி சென்று கூறினேன். அதுவும் அவருக்கு பிடிக்கவில்லை. பின்னர் அவரே எனக்கு வேறு ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்து இதை பண்ணுங்கள் என்று கூறினார். எனக்கு அந்த கதையில் பெரிய உடன்பாடு இல்லாவிட்டாலும் இதிலேயே எட்டு மாதங்கள் கடந்து விட்டதால் அந்த கதையில் காட்சிகளில், திரைக்கதையில் பல மாற்றங்களை செய்து உருவாக்கினோம். ஆனாலும் மையக்கதை என்பது பலவீனமாக இருந்ததால் அந்த படத்தை காப்பாற்ற முடியவில்லை., அதிருப்தியுடன் தான் அந்த படத்தை இயக்கினேன், அதன் பிறகு தான் இந்த படத்தை நாம் இயக்கி இருக்கக் கூடாது என்று உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!