
ஒரு கோடி டெபாசிட் செய்த ஞானவேல்ராஜா : ‛தங்கலான் ரிலீஸ் சிக்கல் தீர்ந்தது
அதாவது அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்ற பைனான்சியரிடம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பத்து கோடி கடன் வாங்கியுள்ளார்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன். பணத்தை திருப்பி தராததால் இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. பணத்தை திருப்பி தரச் சொல்லி கோர்ட்டும் உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் மீது திவாலானவர்கள் என அறிவிக்க வேண்டும் என சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் விசாரணையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் "தங்கலான்" பட வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடி, "கங்குவா" வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கார்த்திகேயன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு இன்று (ஆக., 14) மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ஞானவேல் ராஜா தரப்பில் ரூ.1 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்மூலம் தங்கலான் வெளியீட்டில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. நாளை திட்டமிட்டப்படி படம் உலகம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!