
ஹனுமான் இயக்குனரின் டைரக்சனில் ஹீரோவாக அறிமுகமாகும் பாலகிருஷ்ணாவின் மகன்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஹனுமான் படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படம் இயக்குனரின் முந்தைய படத்தைப் போல ஒரு சூப்பர் மேன் கதையம்சத்துடன் தான் உருவாக இருக்கிறதாம். முதல் படத்திலேயே சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் பாலகிருஷ்ணாவின் மகன். அது மட்டுமல்ல பாலகிருஷ்ணாவின் மகளான நந்தமூரி தேஜஸ்வினி இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!