
பணிகளை தொடங்கினார் ஜேசன் சஞ்சய்
அதன் பிறகு பல முன்னணி நிறுவனங்களிடம் கதை சொன்னார். இறுதியாக லைகா நிறுவனம் சஞ்சயை டிக் அடித்தது. லைகா நிறுவனம் "இந்தியன் 2" மற்றும் "விடாமுயற்சி" படங்களில் பிசியாக இருந்தால் சஞ்சய் இயக்கும் படத்தை தள்ளி வைத்தது. இதனால் படமே டிராப் ஆகிவிட்டதாகவும் செய்திகள் பரவின. சமீபத்தில் சஞ்சய்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததன் மூலம் படத்தை உறுதி செய்தது லைகா.
தற்போது சஞ்சய் படத்தின் பணிகளை தொடங்கி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் யகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள். முழு விபரங்களுடன் முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!