
பிளாஷ்பேக் : கருணாநிதி, ஜெயலலிதா சேர்ந்து பார்த்த எம்.ஜி.ஆர் படம்
"நீரும் நெருப்பும்" படம் புகழ்பெற்ற "தி கோர்சிகன் பிரதர்ஸ்" என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. தந்தையை கொன்றவர்களை மகன்கள் வளர்ந்து பழிவாங்குவதுதான் கதை. மணிவண்ணன், கரிகாலன் என்ற 2 கேரக்டர்களில் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். ஒரு வேடத்தில் கருப்பான தோற்றம் கொண்டவராக நடித்தார். ஜெயலலிதா ஹீரோயின். இவர்களுடன் , சோ, தேங்காய் சீனிவாசன், ரி.கே.பகவதி, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், சதன், கரிக்கோல் ராஜ், சி.எஸ்.பாண்டியன், குண்டுமணி, ஜஸ்ரின், ஜெயக்கொடி நடராஜ அய்யர், எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன், உசிலைமணி, மனோரமா, ஜி.சகுந்தலா, சண்முகசுந்தரி, உட்பட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படத்தின் வாள் சண்டை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக தொழில்நுட்பம் வளராத காலத்தில் இரண்டு எம்.ஜி.ஆரும் சண்டையிடும் காட்சிகள் நுட்பமாக படமாக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. எம்.ஜி.ஆர் கருப்பு நிறத்தில் நடித்ததையும், கதைப்படி இறந்து போதையும் மக்கள் விரும்பவில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!