
படப்பிடிப்புகளைத் தள்ளி வைக்கும் பவன் கல்யாண்
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு இன்னும் இரண்டு நாட்களில் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வந்த பின் டில்லி சென்ற பவன் கல்யாண், என்டிஏ கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிலும் மனைவியோடு கலந்து கொண்டார்.
ஆந்திர திரும்பிய பின் அடுத்த சில மாதங்களுக்கு அவர் தீவிர அரசியல் பணியாற்ற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் ரீதியாக சில முக்கிய முடிவுகளையும் எடுக்க உள்ளாராம். அதனால், அடுத்த சில மாதங்களுக்கு தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளைத் தள்ளி வைக்கத் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.
தற்போது, “ஹரி ஹர வீரமல்லு, ஓஜி, உஸ்தாத் பகத்சிங்” ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் பவன் கல்யாண்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!