
விஜய் பிறந்தநாளில் போக்கிரி மறு வெளியீடு
இந்த படம் 2007ம் ஆண்டு வெளிவந்தது. கனகரத்னா மூவிஸ் சார்பில் எஸ்.சத்திய ராமமூர்த்தி தயாரித்திருந்தார். பிரபுதேவா இயக்கி இருந்தார். அசின், வடிவேலு, நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். காதல், ஆக்க்ஷன், நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததனால் படம் வெற்றி அடைந்தது. படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது. அப்போதே "ஷிப்டிங்" எனப்படும் மறுவெளியீட்டில் வெளியாகி 100நாட்கள் ஓடி சாதனை படைத்தது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!