
ஒரே பாடலை 6 மொழிகளில் பாடிய ஸ்ரேயா கோஷல்
புஷ்பா படத்தில் இடம்பெறும் "சூசெகி" என்ற பாடலை, "அன்காரூன்" என ஹிந்தியிலும், "சூடான" என தமிழிலும், "கண்டாலோ" என்று மலையாளத்திலும், "நொடோகா" என கன்னடத்திலும் "ஆகுன்னர்" என பெங்காலியிலும் பாடி உள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடலுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பாடலாசிரியர்கள் பாடலை எழுதி உள்ளனர்.
புஷ்பாவின் முதல் பாகத்தில் இடம் பெற்ற "ஊ சொல்றியா மாமா" பாடலை நான்கு பாடகிகள் பாடினர். இந்த பாகத்தில் அதுபோன்ற ஒரு பாடலை ஸ்ரேயாவே பாடி உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!