
உலகத்திற்கே ஆன்மிகம் தேவை : இமயமலை கிளம்பிய ரஜினி பேட்டி
அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி" படத்தில் நடிக்க போகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்க உள்ளது. அதற்குள் இமயமலை சென்று திரும்ப எண்ணிய ரஜினி இன்று(மே 29) இமயமலை புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛இந்தியா மட்டுமல்ல, உகத்திற்கே ஆன்மிகம் தேவை. ஆன்மிகம் என்றால் சாந்தியும் சமாதானமும்"" என்றார். தொடர்ந்து அவரிடம் ‛இசையா, கவிதையா" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‛நோ கமென்ட்ஸ்" என்றார். மேலும் அவரிடத்தில் ‛பிரதமர் மோடி மீண்டும் வெல்வாரா" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு, ‛‛மன்னிக்கவும், அரசியல் பற்றி எதுவும் கேட்காதீங்க"" என தெரிவித்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!