
எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா
இருதினங்களாக விக்னேஷ் சிவன் உடன் இணைந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளார் நயன்தாரா. இந்நிலையில் ரெசார்ட் ஒன்றில் கார்டன் பகுதியில் மரத்தடியில் விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் ரொமான்ஸ் போட்டோவை பகிர்ந்து, ‛எனக்கு மிகவும் பிடித்த இந்த இடத்திற்கு 5 ஆண்டுகளுக்கு பின் வந்துள்ளேன்" என பதிவிட்டுள்ளார் நயன்தாரா. ஆனால் இது எந்த இடம் என அவர் குறிப்பிடவில்லை. குறிப்பாக ஒரு போட்டோவில் நயன்தாரா காது அருகே வைத்துள்ள ஒற்றை பூ ரசிகர்களை கவர்ந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!