
கூலி படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ?
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் அதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. "வேட்டையன்" படப்பிடிப்பில் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த். ஒரு கட்டத்தில் அவர் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்த பிறகே படப்பிடிப்பை வேகமாக நடத்தினார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னும் ரஜினிகாந்த் ஓய்வெடுப்பது அனைவருக்கும் தெரிந்ததே. "கூலி" படப்பிடிப்பிற்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. வெளிநாடு செல்வாரா அல்லது இங்கேயே பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!