
ரசவாதியில் சித்த வைத்தியர் கேரக்டரை உருவாக்கியது ஏன்? : சாந்தகுமார் பேட்டி
படம் குறித்து இயக்குனர் சாந்தகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : "மௌனகுரு" படத்திற்கு பிறகு ‛மகாமுனி" இயக்க சிறிய இடைவெளி இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு இடைவெளி எதுவும் இல்லை. கொரோனா காலம் வந்ததால் சற்று தாமதமாகி விட்டது. இனி இந்த இடைவெளி இருக்காது. ரசவாதம் என்பது உலோக மாற்றம். அதுவே மனிதனின் மூளைக்கும் பொருந்தும். அதுதான் படத்தின் கதை.
அலோபதி டாக்டர்களை போன்றே பல இளைஞர்கள் சித்த வைத்தியம் படித்துவிட்டு டாக்டர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிகம் அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் இந்த படத்தின் நாயகனை ஒரு இளம் சித்த வைத்திய டாக்டராக உருவாக்கினேன்.
ரசவாதியில் எனது முந்தைய படத்தின் தரம் இருக்கும் ஆனால் அவற்றின் கதை, களம் இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும். இது மூன்றாவது ஒரு அனுபவத்தை தரும். எல்லா அம்சங்களும் நிறைந்த படமாக இருக்கும். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள், எல்லாருமே தங்கள் சிறந்த உழைப்பை கொடுத்துள்ளனர் என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!