
ப்ளடி பெக்கராக மாறிய கவின்
இதுஅல்லாமல் இயக்குனர் நெல்சன் முதல் முறையாக பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு " ப்ளடி பெக்கர்" என தலைப்பு வைத்துள்ளதாக இன்று புரொமோ வீடியோ உடன் அறிவித்துள்ளனர். இப்படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, மைசூர் போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதில் கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார். ஜெயிலர் தன்ராஜ், அனார்கலி நாசர், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!