கில்லி எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ?
ஏப் 24, 2024
Advertisement
ரீ-ரிலீஸ் பட வசூல் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது "கில்லி". இந்தப்படம் ஒரு ரீமேக் படம் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில், மணிசர்மா இசையமைப்பில், மகேஷ்பாபு, பூமிகா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் 2003ம் ஆண்டு சங்கராந்திக்கு ஒக்கடு என்ற பெயரில் வெளிவந்த படம் அது.
அதன்பின் அப்படத்தைத் தமிழில் "கில்லி" என்ற பெயரில் விஜய், த்ரிஷா நடிக்க ரீமேக் செய்து 2004ம் ஆண்டு வெளியிட்டனர். இங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கடுத்து கன்னடத்தில் மெஹர் ரமேஷ் இயக்க, புனித் ராஜ்குமார், அனுராதா மேத்தா, பிரகாஷ்ராஜ் நடிக்க 2006ல் ‛அஜெய்" என்ற பெயரில் வெளியிட்டனர். அங்கும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
2008ல் பெங்காலியில் "ஜோர்" என்ற பெயரிலும், 2008ல் "மாதே ஆனிடெலா லாகே பகுனா" என்ற பெயரில் ஒடியா மொழியிலும், பங்களா மொழியில் "போலோனா கோபுல்" என்ற பெயரில் 2009லும், 2015ல் ஹிந்தியில் "தீவார்" என்ற பெயரிலும், 2021ல் "கபாடி" என்ற பெயரில் சிங்களத்திலும் ரீமேக் ஆகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!