
வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ?
நேற்று அந்தக் கால ஹிட் பாடலான "அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா" பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ ஒன்றைப் போட்டுள்ளார். மேலும், “தோ அவுர் தோ பியார்" படத்தின் குடும்பத் திரையிடலில், ஒரு விஷயம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. சிறு வயதில் எனது பெற்றோர்களுடன் டிவியில் முதல் முறை பார்த்த எனது அபிமானப் பாடல்களில் ஒன்று இது. அதனால்தான் தமிழ் பிராமணப் பெண்ணான நான் 9 கஜப் புடவையில் "மடிசார் மாமி"யாக,” எனப் பதிவிட்டுள்ளார்.
ஒரே நாளில் அந்த வீடியோவிற்கு 5 லட்சம் வரையிலான லைக்குகள் கிடைத்துள்ளது.
வித்யா பாலன் நடித்த "தோ அவுர் தோ பியார்" ஹிந்திப் படம் கடந்த வாரம் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!