
வீர தீர சூரன் - டிராப் ஆன படத்தின் பெயரில் விக்ரம் 62
இப்போது விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்க உள்ள விக்ரமின் 62வது படத்திற்கு "வீர தீர சூரன்" என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும், டைட்டில் டீசரும் நேற்று வெளியானது. ஆனால், இப்படம் இரண்டாம் பாகமாக உருவாகும் என "பார்ட் 2" என கூடவே சேர்த்துள்ளார்கள். இந்த இரண்டாம் பாகம் வெளியான பிறகு "பார்ட் 1"ஐ தயாரித்து வெளியிடலாம்.
விஷ்ணு விஷால் நடிப்பில் ஆரம்பமான "வீர தீர சூரன்" படத்தைத் தயாரித்த எவிஆர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் அத்தலைப்பை "ரினீவல்" செய்யாமல் விட்டிருந்தால் மட்டுமே இப்போது விக்ரம் 62 படத்திற்கு இப்பெயரை வைத்திருக்க முடியும். இருந்தாலும் இந்த தலைப்பு விவகாரம் புதிய சர்ச்சையை ஆரம்பிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!