
புஷ்பா 2 - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா?
இப்படத்தின் வட இந்திய, ஹிந்தி தியேட்டர் உரிமை சுமார் 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. பிரபல வினியோகஸ்தரான அனில் தடானி "அட்வான்ஸ் முறை"யில் அந்த உரிமையை வாங்கியுள்ளாராம். "ஜவான்" படத்தின் தியேட்டர் உரிமை கூட 150 கோடிக்குத்தான் விற்கப்பட்டதாம். அப்படியிருக்க டப்பிங் படமான "புஷ்பா 2" படம் அதைவிட 50 கோடி கூடுதலாக வாங்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
400 கோடிக்கு அதிகமாக வசூலித்தால் மட்டுமே அந்த 200 கோடி ரூபாய் முதலீட்டை எடுக்க முடியும். இருந்தாலும் படம் அதை வசூலிக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கியுள்ளதாகப் பேசிக் கொள்கிறார்கள். 1000 கோடிக்கும் அதிகமான வசூலை "புஷ்பா 2" எட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம் படக்குழு.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!