மூன்று ஹிட் படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் கார்த்தி
Advertisement
Advertisement
மூன்று ஹிட் படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் கார்த்தி
ஏப் 09, 2024
அ நிறம் | அளவு
Advertisement
ஜப்பான் படத்தை அடுத்து 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடித்து வந்த மெய்யழகன், நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வந்த வா வாத்தியாரே ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்து விட்டார் கார்த்தி. இந்த நிலையில் அடுத்தபடியாக ஏற்கனவே தான் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற கைதி, தீரன் அதிகாரம் ஒன்று, சர்தார் ஆகிய மூன்று படங்களின் இரண்டாம் பாகத்தில் அடுத்தடுத்து அவர் நடிக்க போகிறார். இதில் முதல் படமாக சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. கார்த்தி நடித்த படங்களில் சர்தார் அதிகமாக வசூலித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!