வெங்கட் பிரபுவின் தலையில் அடிப்பதற்கு தடியோடு நிற்கும் அர்ச்சனா கல்பாத்தி
Advertisement
Advertisement
வெங்கட் பிரபுவின் தலையில் அடிப்பதற்கு தடியோடு நிற்கும் அர்ச்சனா கல்பாத்தி
ஏப் 09, 2024
அ நிறம் | அளவு
Advertisement
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சென்னை, தாய்லாந்து, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது துபாயில் நடக்கிறது. இதையடுத்து இறுதி கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்களை வெங்கட் பிரபு வெளியிடாமல் இருப்பதால் விஜய் ரசிகர்கள் அவரிடத்தில் அப்டேட் கேட்டு தொடர்ந்து சோசியல் மீடியாவில் அவருடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு. அதில், கோட் படத்தின் படப்பிடிப்பு தினமும் இப்படித்தான் தொடங்குகிறது என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சகோதரிகளான அர்ச்சனாவும், ஐஸ்வர்யாவும் கட்டையால் வெங்கட் பிரபுவின் தலையில் தாக்குவது போல் நிற்க, அவரோ அவர்களைப்பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி நின்று கொண்டிருக்கிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!