
தம்பிக்கு உதவிய சிரஞ்சீவி : தேர்தல் செலவுக்கு ரூ.5 கோடி கொடுத்தார்
சிரஞ்சிவியின் தம்பி பவன் கல்யாணும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர். அவர் "ஜனசேனா" என்ற கட்சியை நடத்தி வருகிறார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் கட்சியை நடத்தி வருகிறார். நடைபெற இருக்கும் பார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.
இந்நிலையில் சீரஞ்சிவி தனது தம்பிகளான பவன் கல்யாண், நாகபாபுவை ஐதராபாத் வரும்படி அழைத்தார். ஐதராபாத் புறநகரில் உள்ள முச்சிந்தலில் "விஸ்வம்பரா" படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சீரஞ்சிவியை இருவரும் சந்தித்தனர். தம்பிகளுடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடி பின்னர் ஜனசேனா கட்சியின் தேர்தல் செலவுக்காக 5 கோடி ரூபாயை நன்கொடையாக சிரஞ்சீவி வழங்கினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்தார் பவன் கல்யாண்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!