
பிளாஷ்பேக்: முதல் அலிபாபா என்.எஸ்.கிருஷ்ணன்
அலிபாபா கதையில் முதலில் நடித்தது எம்.ஜி.ஆர். தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அலிபாபாவாக முதலில் நடித்தது என்.எஸ்.கிருஷ்ணன். 1941ல் வெளியான "அலிபாபாவும் 40 திருடர்களும்" படத்தில் அலிபாபாவாக என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தார். என்.எஸ்.கிருஷ்ணன் கதை நாயனாக நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.
அலிபாபா காதலிக்கும் மார்ஜியானாக என்.எஸ்.கிருஷ்ணனின் நிஜ மனைவி டி.ஏ.மதுரம் நடித்தார். அலிபாபாவின் கொடுமைக்கார அண்ணன் காசீமாக கன்னட நடிகர் ஹிரண்யா நடித்தார். கொள்ளைக்கூட்டத் தலைவனாக கே.பி.காமாட்சி நடித்தார். என்.எஸ்.பாலகிருஷ்ணன் இசையமைத்திருந்தார். இந்த படம் தோல்வி அடைந்தது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!