
ரகசியத்தை உடைத்த கமல்ஹாசன் : அதிர்ச்சியில் பிரபாஸ் ரசிகர்கள்
கமல்ஹாசன் கதாபாத்திரம் தான் படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரம் என்ற தகவல் ஏற்கெனவே பரவி இருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தில் தான் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இது படத்தின் கதாநாயகன் பிரபாஸ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படம் பற்றிய ரகசியத்தை படக்குழுவினர் இதுவரை காப்பாற்றி வருகிறார்கள். இதனிடையே, கமல்ஹாசன் அவரது கதாபாத்திரம் பற்றிய ரகசியத்தை உடைத்துவிட்டார். அதனால், படத்தின் வில்லன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம், முதல் பாகத்தில் அவர் சிறப்புத் தோற்றம்தான், இரண்டாம் பாகத்தில் அவர்தான் முக்கிய வில்லன் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
படக்குழுவினர் இது பற்றி அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!