
அப்டேட் கேட்டால் ஐபிஎல் பார்க்குறியா : வெங்கட் பிரபுவை வெளுத்த விஜய் ரசிகர்கள்
விஜய் நடிக்கும் "கோட்" படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு தீவிர கிரிக்கெட் வெறியர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் இயக்கிய முதல் படமான "சென்னை 28" படமே கிரிக்கெட்டைப் பற்றிய படம்தான்.
"கோட்" பட வேலைகளுக்கு நடுவிலும் வெங்கட் பிரபு ஐபிஎல் போட்டிகளைப் பார்த்து வருகிறார். நேற்றைய பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டியின் போது "யு பியூட்டி தினேஷ் கார்த்திக்" எனப் பதிவிட்டிருந்தார். அப்பதிவில் "அப்டேட் எங்கே" என்ற கமெண்ட்டுகள்தான் அதிகம் இருந்தது.
நிம்மதியாக ஐபிஎல் போட்டிகளைக் கூட பார்க்க விடாமல் செய்கிறார்களே என்ற கோபத்தில்… விஜய் ரசிகர்களிடம் கோப்பட முடியுமா ?. அதனால், செல்லமான கோபத்தில், “அநியாயம் பண்ணாதீங்க... அப்டேட் மிக விரைவில் நண்பா நண்பிஸ், கோட்… அது சிறப்பான அப்டேட் ஆக இருக்கும் என்னை நம்புங்க,” என அடுத்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கும் பலவிதமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளார்கள் விஜய் ரசிகர்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!