
‛ஆடுஜீவிதம் படத்திற்காக 4 மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்திலேயே லைவ் ரெக்கார்டிங் முறை பயன்படுத்தப்பட்டு வசனங்கள் லைவ் ஆக பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் தனது கதாபாத்திரத்திற்கு பிரித்விராஜே டப்பிங் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஒரு முறை உயிரோடு வாழ்ந்த இடத்திற்கு நான்கு முறை மறு விசிட் அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!