
தமிழக அரசுக்கு மாதவன் நன்றி
சிறந்த நடிகருக்கான பரிசு வென்ற நடிகர் மாதவன் அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “இறுதிச் சுற்று திரைப்படத்திற்காக 2015ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை எனக்கு வழங்கி கவுரவித்த தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . மேலும் வெற்றி பெற்ற சக வெற்றியாளர்களான சுதா, ஜோதிகா, ரித்திகா, கவுதம் கார்த்திக், அரவிந்த்சுவாமி, ஜிப்ரான் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!