
இந்தியன் 2 படத்திற்குத் தயாராகும் வட சென்னை
படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்ற தகவல் பரவிய நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த உள்ளார்களாம். வட சென்னை பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுவர்களில் இந்தியன் தாத்தா ஓவியத்தை படக்குழு சார்பாக வரைந்து வருகிறார்கள்.
பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த "மெட்ராஸ்" படத்தில் அந்த "ஒற்றை சுவர்"தான் படத்தின் மையக் கருவாக இருக்கும். அது போன்ற குடியிருப்புகளில் அடுத்தடுத்த கட்டிடங்களில் விதவிதமான இந்தியன் தாத்தா உருவங்கள் வரையப்பட்டு வருகிறது.
இந்தியன் தாத்தா யார் என்பதைப் பற்றிய பாடலை அந்தப் பின்னணியில் படமாக்க இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!