
மெட்ராஸ்காரன் படப்பிடிப்பு தொடங்கியது
படம் பற்றி இயக்குனர் வாலிமோகன்தாஸ் கூறும்போது, “தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. ரங்கோலி படம் பார்த்துக் கூப்பிட்டார். கதை சொன்ன 5 நிமிடத்தில் இந்தப்படம் செய்ய ஒத்துக் கொண்டார். ஷேன் நிகாமை சந்தித்ததே மறக்க முடியாத அனுபவம், அவர் தமிழில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு நன்றி. ஐஸ்வர்யா தத்தாவால்தான் இந்தப்படம் ஆரம்பித்தது அவருக்கு என் நன்றி. நிஹாரிகாவுக்கு இப்படத்தில் நல்ல கதாப்பாத்திரம். ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!