
பண்டிகை வந்தாலே ரசிகர்களால் தொல்லை : விளாசும் ரஜினியின் பக்கத்து வீட்டு பெண்
இந்நிலையில் ரஜினியின் பக்கத்து வீட்டு வயதான பெண்மணி ஒருவர் ரஜினி ரசிகர்களின் தொல்லை பற்றி பாதுகாவலர்கள் மற்றும் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ‛‛தலைவா தலைவா என ரசிகர்கள் கோஷம் போடுவார்கள். எங்களை மாதிரி இந்த தெருவில் உள்ள 21 வீட்டுக்காரங்க கஷ்டப்படுகிறார்கள். ஏன் உங்க(ரஜினி) வீட்டு கேட்டை திறந்து உள்ளே விட வேண்டியது தானே. தலைவரை பார்க்க வேண்டியது தானே. நீங்க கேட்டை மூடியே வைக்கிறீங்க. இவங்க எல்லோரும் எங்க வீட்டு முன்னாடி வந்து தான் இப்படி கத்தி கூச்சலிடுகிறார்கள். நாங்களும் வரி கட்டுறோம் ஆனால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. போதாகுறைக்கு காலையில இப்படி பண்டிகை தினமும் அதுமா இப்படி தொந்தரவு செய்றாங்க. சாமி கூட கும்பிட முடியவில்லை"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!