
கேஜிஎப் 1, புஷ்பா 1, காந்தாரா வரிசையில் ஹனு மான்
"பாகுபலி 1 - 2, கேஜிஎப் 1 - 2, புஷ்பா 1, காந்தாரா" ஆகிய படங்கள் வட இந்திய மாநிலங்களிலும் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. தற்போது அந்த வரிசையில் தெலுங்கில் தயாராகி வெளிவந்துள்ள "ஹனு மான்" படம் சேரும் என்கிறார்கள்.
இப்படத்தின் முதல் 3 நாள் ஹிந்தி வசூல் மட்டும் 12 கோடியைக் கடந்துள்ளதாம். "கேஜிஎப் 1, காந்தாரா" படங்களின் வசூலை விட அதிகமாகவும், புஷ்பா 1 படத்திற்கு இணையாகவும் உள்ளதாக பிரபல பாலிவுட் விமர்சகர் தெரிவித்துள்ளார்.
வரும் நாட்களில் இந்தப் படத்தின் வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் ராமர், ஹனுமான் சக்தியைப் பற்றிய பேன்டஸி படமாக வெளிவந்துள்ள "ஹனு மான் படம் பெரிய வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!