கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு மூன்று படங்களை இயக்கப் போகும் அருண் மாதேஸ்வரன்
Advertisement
Advertisement
கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு மூன்று படங்களை இயக்கப் போகும் அருண் மாதேஸ்வரன்
ஜன 10, 2024
அ நிறம் | அளவு
Advertisement
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படம் வருகிற 12ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛கேப்டன் மில்லர் படத்தின் ரிலீசுக்கு பிறகு ஒரு படத்தை தயாரித்து, ஒளிப்பதிவு செய்து இயக்க உள்ளேன். அந்த படத்தை 15 நாட்களில் முடிப்பதற்கும் திட்டமிட்டுள்ளேன். அதன்பிறகு மீண்டும் தனுஷ் நடிப்பில் ஒரு சரித்திர படத்தை இயக்கப்போகிறேன். அந்த படத்தை தனுஷே தயாரித்து நடிக்க இருக்கிறார். அதன்பிறகு ஜகமே தந்திரம் படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் அருண் மாதேஸ்வரன். அந்த வகையில், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து மூன்று படங்களை அவர் இயக்கப் போகிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!