
சிம்பு உடன் நடித்தே தீருவேன்: அடம் பிடிக்கும் தேவயானி ஷர்மா
இந்த நிலையில் அவர் “சிம்புவுடன் நடித்தே தீருவேன். அதற்கான வேலைகளை தொடங்கி விட்டேன்” என்று பகிரங்கமாக அறிவித்து பரபரப்பு கிளப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நான் நடித்தாலும் எனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் வெளிப்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம்.
வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதுதான். இதற்காக முழு வீச்சில் இறங்கி உள்ளேன், அதற்கான வேலையும் தொடங்கி விட்டது. அதுமட்டுமின்றி மக்கள் நான் பார்க்கும் வேலையை அங்கீகரித்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வாழ்வின் லட்சியமாகும்” என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!