
கதை நாயகன் ஆனார் யுகேந்திரன்
இந்த நிலையில் யுகேந்திரன் கதை நாயகனாக நடிக்க "காழ்" என்ற படம் தயாராகி உள்ளது. இதில் யுகேந்திரனுடன் சித்தார்த் அன்பரசு, மிமி லீயோனார்ட், நித்யா பாலசுப்பிரமணியன் நடித்துள்ளனர். மோகன்ராஜ் வி.ஜே இயக்கி, தயாரித்துள்ளார். அவருடன் இணைந்து செல்வா கதிரேசன், கிருஷிக்கா தயாரித்துள்ளனர். வசந்த் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹெல்வின் கே.எஸ்., சஞ்சய் அரக்கல் இசையமைத்துள்ளனர். வெளிநாட்டுக்கு சென்று வாழும் ஒரு தமிழ் குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளின் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. முழு படமும் ஆஸ்திரேலியாவில் படமாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!