
மலேசியாவில் நிறைவடைந்த விஜய்சேதுபதி படம்
இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சண்டைக் கலைஞர்களுடன், விஜய் சேதுபதி கலந்துகொள்ள, பிரம்மாண்ட சண்டைக்காட்சியும் சேஸிங் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் பத்துமலை முருகன் கோவிலில், இறுதிக்காட்சியை படமாக்கி, படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது படக்குழு. விரைவில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளைத் துவங்கவுள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!