
தீபாவளி படங்களையும் சமாளிக்கும் லியோ
தீபாவளிக்காக வெளியான படங்களுடன் போட்டி போட்டு "லியோ" படமும் தீபாவளி விடுமுறை நாட்களில் பல தியேட்டர்களில் ஏறக்குறைய அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ மொத்த வசூல் பற்றிய அறிவிப்பு கடைசியாக அக்டோபர் 31ம் தேதியன்று வெளியானது. அப்போது 540 கோடி வசூலை உலகம் முழுவதும் பெற்றதாக அறிவித்தார்கள். அதன்பின் மொத்த வசூல் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் வெளிநாடுகளில் இப்படம் 24 மில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 201 கோடி ரூபாய், வசூலித்ததை தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவு செய்தது.
இன்னமும் படம் ஓடிக் கொண்டிருப்பதால் கடந்த 15 நாட்களில் எப்படியும் 60 கோடி வசூலித்து 600 கோடியைக் கடந்திருக்கலாம். நாளை இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஒருவேளை அதற்கு முன்னதாக இதுவரையிலான மொத்த தியேட்டர் வசூலைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவும் வாய்ப்புள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!