
தமிழில் வெளிவருகிறது பிளானட் ஆப்தி ஏப்ஸ் 4ம் பாகம்
இந்த பாகத்தில் மனிதர்களிடம் தனது தனி ராஜ்யத்தை இழந்த ஏப்ஸ்கள். மனிதர்களுக்கு அடிமையாக வேலை செய்கிறது. மனிதர்களிடமிருந்து விடுதலை அடைந்து மீண்டும் தங்களது சாம்ராஜ்யத்தை (கிங்டம்) எப்படி நிறுவுகிறார்கள் என்பதுதான் கதை. தற்போது இதன் டிரைலர் ஆங்கிலம் மட்டுமல்லாது இந்தியாவில் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வெஸ் பால் இயக்கியுள்ளார். ஓவன் டீக் , ப்ரேயா ஆலன், கெவின் டுராண்ட் , பீட்டர் மேகன் மற்றும் வில்லியம் ஹெச்.மேசி ஆகியோர் அனிமேஷன் கேரக்டர்களுக்கு உருவமும், குரலும் கொடுத்துள்ளனர்.
டுவன்டின்த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்திய திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறது. அடுத்த ஆண்டின் துவகத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!