
ஹீரோவாக 21 ஆண்டுகளைக் கடக்கும் சிலம்பரசன்
டீன் ஏஜ் வயதில் "மோனிஷா என் மோனலிசா" மற்றும் "சொன்னால்தான் காதலா" ஆகிய படங்களில் பாடல்களில் மட்டும் வந்து நடனமாடி நடித்தார்.
அதன் பிறகு கதாநாயகனாக அவர் அறிமுகமான படம் "காதல் அழிவதில்லை". டி ராஜேந்தர் இயக்கிய அந்தப் படம் 2002ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெளியானது. இன்றுடன் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க வந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்த 21 வருடங்களில் 25 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவற்றில், சிலம்பரசன் கதாநாயகனாகவும் நடித்து இயக்குனராகவும் அறிமுகமான "வல்லவன் (2006), அதற்கு முன் ‛மன்மதன் (2004), "விண்ணைத் தாண்டி வருவாயா (2010)," "செக்கச் சிவந்த வானம் (2018)", "மாநாடு (2021), "வெந்து தணிந்தது காடு" (2022), பத்து தல (2023) ஆகிய படங்கள் குறிப்பிட வேண்டிய முக்கியப் படங்கள்.
அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள சரித்திரப் படத்தில் நடிப்பதற்காக தன்னைத் தயார்படுத்தி வருகிறார் சிலம்பரசன்.
தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்குப் பிறகு இயக்கம், இசை, பாடகர் என தனித் திறமைகள் கொண்ட கதாநாயகன் சிலம்பரசன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!