
மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு திரும்பிய லட்சுமி மேனன்
நீண்ட இடைவெளிக்கு பிறகு "புலிக்குத்தி பாண்டி" படத்தில் நடித்தார். அதற்கு பிறகும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக சமூக வலைத்தளப் பக்கம் வராமல் ஒதுங்கியே இருந்தார். சமீபத்தில் வெளியான "சந்திரமுகி 2" படத்தில் அவர் சந்திரமுகியாக வந்து போட்ட ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. கங்கனாவை விட அதிகம் பேசப்பட்டார். தற்போது அவருக்கு மேலும் வாய்ப்புகள் வர துவங்கி உள்ளது.
கடந்தாண்டு அகஸ்ட் மாதம் இன்ஸ்டாகிராமில் கடைசியாக ஒரு போட்டோ போட்டவர் நேற்று ஒரு சேலையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து மீண்டும் இன்ஸ்டா பக்கம் வந்திருக்கிறார். இதனால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் அவரது பாலோயர்ஸ்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!