
வெளியான எல்சியு ரகசியம் : எந்த படத்தை மறுமுறை பார்க்கச் சொல்வார் லோகேஷ்?
"விக்ரம்" படத்தை அடுத்து "லியோ" படத்தை லோகேஷ் இயக்க ஆரம்பித்ததும், அதில் "எல்சியு" இருக்கிறதா இல்லையா என்பது நேற்று வரை கேள்வியாக இருந்து வந்தது. ஆனால், படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் படத்தில் "எல்சியு" இருக்கலாம் என்ற ரகசியத்தை உடைத்துவிட்டார். அதனால், காலை முதல் ரசிகர்கள் "எல்சியு, எல்சியு" என டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
கடந்த வருடம் "விக்ரம்" படம் வெளிவந்த போது, அதற்கு முன்தினம், ""கைதி"யை இன்னொரு முறை மறுபார்வை பார்த்துவிட்டு "விக்ரம்" அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்று பதிவிட்டிருந்தார். "கைதி"க்கும் "விக்ரம்" படத்திற்கும் தொடர்பு இருந்தது.
நாளை "லியோ" வெளியாக உள்ள நிலையில் அதைப் பார்ப்பதற்கு முன்பாக எந்தப் படத்தை மறுபார்வை பார்த்துவிட்டு வாருங்கள் என லோகேஷ் இன்றிரவு சொல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!