
போதைக்கு எதிராக போராடும் சாலா
படம் பற்றி இயக்குனர் மணிபால் கூறும்போது, “கதையே கதையின் நாயகன் என்ற கோட்பாடு தமிழ் சினிமா வரலாற்றில் மீண்டும் மீண்டும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. "சாலா" ஒரு தனித்துவமான மற்றும் அழுத்தமான கதையைக் கொண்டுள்ளது. இது சமகாலத்தில் மதுப்பழக்கம் காரணமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசுகிறது. படம் அதைச் சுற்றியுள்ள பிரச்சினைகளைக் காண்பிப்பதன் மூலம் பார்வையாளர்கள் மத்தியிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. ஒரு ஒயின் ஷாப்பை குத்தகைக்கு எடுக்கும் செயல்பாட்டில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் மற்றும் அதன் பின்னான பகை ஆகியவற்றைச் சுற்றி கதை பரபரப்புடன் நகர்கிறது.
அறிமுக நடிகையான ரேஷ்மா, கதாநாயகியாக புனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 25 வயது சமூக ஆர்வலராகவும், மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்க்கும் பள்ளி ஆசிரியையாகவும் இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!