
சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம்
படம் குறித்து அனில் கூறுகையில் ‛‛வருடம் முழுவதும் அதிக மழை பொழியும் அடர்ந்த வனம் சூழ்ந்த ஒரு கிராமத்தில், புது மணப்பெண் எதிர்கொள்ளும் போராட்டத்தை "சாயாவனம்" படம் விவரிக்கிறது. இத்தலைப்புக்கு "அடர்ந்த காடு" என்று பொருள் இருக்கிறது. இது படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் குணத்தைக் குறிக்கும். ஒவ்வொரு கேரக்டரும் காடு போல் அடர்த்தியானது. அவர்களிடம் பல்வேறு ரகசியங்கள் மறைந்துள்ளன.
திருமணம் நடந்த அன்றே கணவன் காணாமல் போகிறான். தனித்துவிடப்படும் அவள் அந்த மலைகிராமத்தில் எத்தகைய பிரச்னைகளை சந்திக்கிறாள், தன் கணவனை அவள் கண்டுபிடித்தாளா? அவனுக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் திரைக்கதை. முழு படமும் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் சிரபுஞ்சியில் படமாகியுள்ளது"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!