
கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம்
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரியதர்ஷினி அருணாச்சலம் கூறியதாவது: இந்தப் படத்தில் துணிச்சலான பெண்ணாக நடிப்பதால் என்னுடைய வசன உச்சரிப்பு அதற்கேற்ற மாதிரி சற்றே வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். இதனால் அதற்கென்று தனி பயிற்சி பெற்று நடித்தேன். இயக்குனர் சரண்ராஜும் நானும் வார்த்தைகளால் மோதிக் கொள்ளும் காட்சிகள் நிறைய இருந்தது. அந்த காட்சிகளில் நடிக்க பயந்தேன். அவர்தான் “நான் யார் என்பதை மறந்து விட்டு என் கேரக்டரை மட்டுமே மனதில் வைத்து நடி” என்று தைரியமூட்டி நடிக்க வைத்தார்.
பெரும்பாலான படப்பிடிப்பு கடற்கரையிலேயே நடைபெற்றதால் அங்குள்ள மண்தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. நான் கண்களில் லென்ஸ் அணிந்திருந்ததால் கடற்கரையில் பறக்கும் மண் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை லென்ஸ் மாற்றி நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏற்கெனவே டி3, கடைசி காதல் கதை. நிற்க அதற்குத் தக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். தேடிவரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல். கதாபாத்திரம் சிறிதோ அல்லது பெரிதோ எதுவானாலும் கதையின் நகர்வுக்கு அது ஒரு முக்கிய காரணமாக இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். என்கிறார் பிரியதர்ஷினி அருணாச்சலம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!