
சண்டை கலைஞர்களை தேர்வு செய்கிறது யூனியன்
அடுத்த மாதம் 21ம் தேதி இந்த தேர்வு நடக்கிறது. 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும், கார், பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் பயிற்சி, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், வாள் பயிற்சி பெற்றிருந்தால் சிறப்பு தகுதியாக கருதப்படும். கலந்து கொள்கிறவர்கள் உள்ளூர் காவல் நிலையித்தில் எந்த குற்ற வழக்கும் இல்லை என்கிற சான்றிதழ் பெற்று வரவேண்டும். இந்த தேர்வு இனி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சங்க நிர்வாகிகள் இதனை தெரிவித்தனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!