சொந்த வாழ்க்கையை வெப் தொடராக தயாரித்து, இயக்கும் சோனா
செப் 13, 2023
Advertisement
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர் சோனா. ஆரம்பத்தில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த சோனா ரஜினியின் "குசேலன்" படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். "கனிமொழி" என்ற படத்தை தயாரித்து, அதனால் பொருளாதார இழப்பை சந்தித்தார்.
வெங்கட்பிரபு, பிரேம்ஜி கூட்டணியில் இருந்த சோனா அந்த கூட்டணியில் இருந்த எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் புகார் கூறிவிட்டு அங்கிருந்து வெளியில் வந்தார். தற்போது மலையாள படங்களில் நடித்து வரும் சோனா, தனது வாழ்க்கை கதையை வெப் தொடராக இயக்கி, தயாரிக்கப் போவதாக கூறியுள்ளார்.
வெப் தொடருக்கு "ஸ்மோக்கிங்" என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொடரை சோனாவே டைரக்டு செய்கிறார். சோனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!