ஹிந்தி, ஆங்கிலத்தில் ஒத்த செருப்பு
மே 18, 2021
Advertisement
பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கிய பாராட்டையும், தேசிய விருதையும் பெற்ற படம் ‛ஒத்த செருப்பு". இப்போது பிற மொழியில் வெளியிட உள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில், ‛‛என் தமிழ் அழகு. என்னை கூடுதல் அழகாக்குவதும் தமிழ். தட்டுத்தடுமாறி ஆங்கிலமும், தப்பித்தவறி பிற மொழிகளும் பேச முயன்றதுண்டு. "ஒத்த செருப்பு" விரைவில் ஹிந்தி, ஆங்கிலம் பேச இருப்பதால், இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒருவர் தேவை. ஈடுபாட்டுடன் பணிப்புரிய விரும்புபவர்கள் தொடர்பு கொள்க"" என thebioscopefilmframers@gmail.com என்ற இ-மெயில் முகவரியை பதிவிட்டுள்ளார்.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து மற்றுமொரு டுவீட்டில், தனி உதவியாளர் (Personal Assistant) வேணும்னு கேட்டால், பணமே வேணாம், வேலை செய்றேன்னு நிறைய விண்ணப்பங்கள். அன்புக்கு நன்றி. வந்தவை அனைத்தும் சிறப்பாயினும் ஒன்றை தேர்ந்தெடுப்பது என் இயலாமை. மன்னிக்க. இன்னும் 3 தினங்களுக்குள் வரும் விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்படும். நன்றி"" என பதிவிட்டுள்ளார்.
பார்த்திபனின் இந்த பதிவு மூலம் இப்படம் விரைவில் ஹிந்தி, ஆங்கிலத்தில் டப்பாகி உலகம் முழுக்க வெளியிடப்பட உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!